தென்னிந்திய சினனிமாவில் தமது இயல்பான நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பாலிவூட் சினிமாவில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் நடிகை ஆலியா பட்.
இவர் இறுதியாக ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் என் ரி ஆர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபல பாலிவூட் நடிகரான ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து இப்போது ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “எங்கள் குழந்தை விரைவில் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
திருமணத்திற்கு பின்னரும் ஆல்யா நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. இருப்பினும் குழந்தை பிறந்தால் இன்னும் சில காலங்களின் பின்னர் தான் அவர் கெரியரில் கவனம் செலுத்துவார் என ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா?- வெளியாகிய ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய வனிதா
- 27 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய்யின் மூலம் ஜோடி சேர்ந்த குஷ்பு மற்றும் பிரபு- அட இது புது நியூஸாக இருக்கே
- குடும்ப கஷ்டத்துக்காக குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டோம்- ஆர்ஜே பாலாஜி கூறிய அதிர்ச்சித் தகவல்
- தெருவுல ஆடிக்கிட்டு இருந்த என்னை மாரி செல்வராஜ் கூட்டிட்டு வந்து பளார் என்று அறைந்தார்- பிரபல நடிகர் உருக்கம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!