• Nov 19 2024

எங்களுடைய பாட்டி தனி டம்ளர், தட்டு கொடுப்பார்- விவேக் செய்த செயல்- யாரும் அறிந்திடாத விடயத்தை கூறிய அவரது சகோதரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் விவேக்.தனது நகைச்சுவைத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர் என்பதால் அவரைப் போல  1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், திடீரென் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு இறப்புக்குள்ளானார். இவரது இறப்பு திரையுலகினரை பெரும் துன்பத்தில் தள்ளியது.

 சமீபத்தில் தான் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம் வந்து இருந்தது. இதை ஒட்டி விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் செல் முருகன் தொடங்கி இருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் விவேக்கின் அக்கா விஜயலட்சுமி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் விவேக் குறித்து கூறியிருந்தது, சிறுவயதிலேயே விவேக் மிகவும் சுட்டித்தனமாக இருப்பார். எங்களுடைய அப்பா மாதத்தில் பத்து நாட்கள் தான் வீட்டில் இருப்பார். மீதி நாட்கள் எல்லாம் அவருக்கு வெளியில் தான் வேலை. அதனால் வீட்டில் இருக்கும் அந்த கொஞ்சம் நாட்கள் கூட எங்களை அடிக்க மாட்டார், திட்ட மாட்டார். நிர்வாக பொறுப்பு அனைத்துமே அம்மா தான். வெளியில் எங்காவது செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் அம்மா எங்களுடைய பாட்டியிடம் எங்களை விட்டுவிட்டு செல்லுவார்.

எங்களுடைய பாட்டி இவர்கள் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டார். விவேக் மட்டுமே அழைத்துக் கொண்டு செல் என்று சொல்லுவார். அந்த அளவிற்கு அவர் சுட்டித்தனம் செய்வார். விவேக்கிற்கு சின்ன வயதிலேயே நடிப்பு மீது ஆர்வம் உண்டு. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும் அவர்களைப் போலவே மிமிக்கிரி செய்து நடித்து காட்டுவார். அது மட்டும் இல்லாமல் அவர் இருக்கும் இடத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைப்பார். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சந்தோசமாக மாற்றி விடுவார். ஆரம்பத்தில் விவேக்கிற்கு சினிமாவின் மீதெல்லாம் ஈடுபாடு இல்லை. கல்லுரி படிக்கும் போது தான் அவருக்கு நடிப்பு வாய்ப்புகளும் வந்தது. அவர் சினிமா துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.


மேலும், விவேக்கிற்கு சடங்கு, சம்பிரதாயம், ஜாதி, மதம் என இதில் எல்லாம் ஈடுபாடு கிடையாது. மக்களின் சந்தோஷத்தை குறைப்பதே சடங்கு சம்பிரதாயம்தான் என்று கூறுவார். சிறு வயதில் இருக்கும் போது எங்களுடைய பாட்டி எளிதாக பிற ஜாதிகளை கண்டுபிடித்து வருவார். அதனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார். அவர்களுக்கு என்று தனியாக டம்ளர், தட்டு கொடுப்பார். இதை பிடிக்காத விவேக் பாட்டியிடம் வாக்குவாதம் செய்வார். பின் போராடி அவர்களையும் வீட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த அளவிற்கு ஜாதி மதத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர். வள்ளலார் சன்மார்க்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.




Advertisement

Advertisement