விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.காமெடி கலந்த நடிப்பில் ரசிகர்களைகவர்ந்த சிவகார்த்திகேயன் சென்டிமென்ட் காட்சிகளிலும் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்துள்ளது.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20வது படத்தில் கம்மிட் ஆகி நடித்து வருகின்றார்.இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்தப் படப்பிடிப்பு காரைக்குடி பாண்டிச்சேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.
இப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரீனா நடிக்கின்றார். படத்தின் மீதி படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் படத்தின் ப்ரஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகி , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளது.
அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது அந்த வகையில் தற்போது சினிமாவில் நடிகராக மட்டுமன்றி இசை எழுத்தாளராகவும் சினிமாவை கலக்கி வருகிறார் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன். சமீபத்தில் தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அரபி குத்து பாடலை எழுதியிருந்தார் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி 10 கோடி பார்வையாளர்களுக்கு மேல் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னுடைய திரைப்படத்திற்கு பாடல் ஒன்று எழுதியுள்ளார் அதனை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநரான அனுதிப்புடன் பாடல் பதிவு செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- “அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!
- ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யாவிற்கு மயூ சொன்ன விசயம்– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “துரதிர்ஷ்டவசமாக எனக்கு ஏற்பட்டுள்ள நோய்”-பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட வேதிகா..!
- “நீயா நானா” கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது தகவல்..!
- பூஜா ஹெக்டேயின் தங்கச்சியை பார்த்துள்ளீர்களா..? அடுத்த ஹீரோயின் ரெடி ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!