• Nov 14 2024

நட்பை பாராட்ட மறக்காத நம்ம சூப்பர் ஸ்டார்…என்ன செய்தார் தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'சூப்பர் ஸ்டார்' எனக்கொண்டாடப்படும் நடிகர் ரஜனியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளி வந்தாலே அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுவதுண்டு. அந்த வகையில் சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது தமது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவரும் தனது நண்பர் கமல் ஹாசனிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் கூறுகையில் "செகண்ட் ஹீரோவாக நடிப்பதை நிறுத்து ரஜனி. சிங்கிள் ஹீரோவாக நடிங்க என்று கமல் சொன்னார். அதைக் கேட்டுத் தான் சிங்கிள் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கத் தொடங்கினேன்" என்று தன் நண்பனைப் பற்றி ரஜனி பெருமையாகப் பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "கமல் ஹாசன் இயக்கி, நடித்த 'ஹே ராம்' படம் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தை இதுவரை 40 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதுப் புது விஷயங்கள் புரிகிறது" எனவும் ரஜனி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நண்பன் இயக்கிய படத்தை இப்படி அடிக்கடி பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ரஜனி பரந்த மனப்பான்மையுடன் நட்பை பாராட்டத் தவறாதவராவார். இவர் செய்த இவ்விடயம் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement