• Nov 10 2024

ஒரு கட் இல்லை.. ஒரு மியூட் இல்லை.. முதல்முறை ’யூ’ சான்றிதழ்.. பா ரஞ்சித் பெருமிதம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படங்கள் ஆகட்டும், அவரது தயாரிப்பில் உருவான படங்கள் ஆகட்டும், ‘யூஏ’ சான்றிதழ் மட்டும் கிடைத்து வந்த நிலையில் முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு ’யூ’  சான்றிதழ் கிடைத்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் பா ரஞ்சித் தான் இயக்கி வரும் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தொழில்நுட்ப பணிகளை கவனித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியே வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நான் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’ஜெ பேபி’ என்ற திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படம் இப்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் மற்றும் ஒரு மியூட் இல்லாமல் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி படக்குழுவினரை சென்சார் அதிகாரிகள் பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள பா ரஞ்சித், இந்த படம் ஒரு குடும்பத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் மாறன், கவிதா பாரதி, ஜெயா மூர்த்தி, சினேகன் நாராயணன், ஏழுமலை, தக்சா உள்பட பலர் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளனர்.


Advertisement

Advertisement