• Nov 10 2024

ரூ.50 கோடி பட்ஜெட்.. மல்டிஸ்டார் படம்.. பா ரஞ்சித்தின் வேற லெவல் திட்டம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தை தேர்தலுக்கு பின்னரே வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் அடுத்த படத்திற்கான பணியை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

’தங்கலான்’ திரைப்படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டு இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக தாமதம் ஆனதாகவும் இதனால் ஏப்ரல் மாதம் அந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள காரணத்தினால் அந்த பரபரப்பில் இந்த படத்தை வெளியிட வேண்டாம் என பா ரஞ்சித் முடிவு செய்து இருப்பதாகவும் இதனை அடுத்து தேர்தல் முடிந்து மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இடைப்பட்ட காலத்தில் அவர் தனது அடுத்த படத்திற்கான பணியை தொடங்க இருப்பதாகவும் ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அவர் 50 கோடி ரூபாய் பட்ஜெட் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ளும் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பா ரஞ்சித்தின் படத்திற்கு 50 கோடி பட்ஜெட் என்பது அதிகம் என்றாலும் மல்டி ஸ்டார் படம் என்பதால் மூன்று தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் அவர்களிடம் ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement