2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 பத்ம விபூஷண் விருதுகள், 17 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 110 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், ஆண்டு தோறும் இந்த பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராஷ்டிரபதி பவனில் இந்த மாபெரும் விழா நடைபெறும்.
இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு பத்ம விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள் என்பதும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 8 பேர் என்பதும் கூறப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்பட காலம்சென்ற 9 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதோடு, தமிழகத்தில் மொத்தம் 8 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளது.
இந்த 2024 ஆம் ஆண்டிற்கான, 132 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்ம விபூஷண் வென்ற தமிழர்கள்
வைஜெயந்திமாலா பாலி - கலைத்துறை
பத்மா சுப்ரமண்யம் - கலைத்துறை
பத்ம பூஷன் விருது
மறைந்த நடிகர் விஜயகாந்த் - கலைத்துறை
பத்மஸ்ரீ விருதுகள்
பத்திரப்பன் - கலைத்துறை
ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு
ஜோ டி குரூஸ் - இலக்கியம் மற்றும் கல்வி
ஜி நாச்சியார் - மருத்துவம்
சேசம்பட்டி டி சிவலிங்கம் - கலைத்துறை
Listen News!