• Nov 10 2024

கணவனின் இரண்டாவது திருமணத்திற்கு கேட்டரிங் கான்ராக்ட் எடுக்கும் பாக்கியா !

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி,  இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஏராளமான ஆண் ரசிகர்களும் இருக்கின்றனர். 

இந்த சீரியலில் பாக்கியாவும் கோபியும் விவாகரத்து பெற்று, கோபியும் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.  இதனால் கோபியின் தாய் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இனியாவும், செழியனும் பாக்கியா மீது கோபத்தை காட்டி வருகின்றனர்.  வழக்கம்போல கோபியின் தந்தை, எழில், ஜெனி, செல்வி ஆகியோர் பாக்கியாவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.  கோபி வீட்டை விட்டு வெளியானதும்  பாக்கியா கூடுதலாக வேறு வேலையையும் தேடிக்கொண்டிருக்கிறார்.  அப்படி வேலை தேடும் சமயத்தில் ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்று அதில் வெற்றியும் பெற்று கேட்டரிங் கான்டராக்ட் எடுக்கும் பணியை பாக்கியா பெற்றுவிடுகிறார். 


இந்நிலையில் பாக்கியாவிற்கு முதல் கேட்டரிங் கான்டராக்ட் கிடைக்கிறது.  தனது முதல் கேட்டரிங் கான்டராக்ட் ஆர்டரை நினைத்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு அந்த ஆர்டரில் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது,

அப்படி என்ன பெரிய அதிர்ச்சி என்றால் அந்த திருமணம் கோபி-ராதிகாவுடையது.  இதனால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.



Advertisement

Advertisement