விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியும் ராதிகாவும் பாக்கியாவும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி கோபி தன்னுடைய குடும்பத்துடன் மோதலில் ஈடுபட்டும் தான் வருகின்றார்.
அதிலும் கோபி பாக்கியா பழனியுடன் பழகுவதை தவறாக நினைத்து வருகின்றார். பாக்கியாவைப் பற்றி தவறாகப் பேசியதால் எழில் மற்றும் செழியன் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் கோபி சொல்வதைக் கேட்டு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பாக்கியா மீது சந்தேகப்படுவார்களா? அல்லது கோபி ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
இப்படியான நிலையில் ஓர் யூடியூப் சேனல் ஒன்று பாக்கியாவுக்கும் பழனிக்கும் திருமணம் நடைபெறுவது போலவும் அந்த திருமணத்திற்கு ராதிகாவும் கோபியும் சென்றது போல புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஜய் டிவி தன்னுடைய ரீல்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கலாய்த்துள்ளனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.
Listen News!