சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் சுசித்ரா. கன்னட நடிகையான இவர் தமிழில் நடிக்கும் முதல் சிரியல் இதுவாகும்.
இதில் அவர் பாக்யலட்சுமி என்கிற லீட் ரோலில் நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருப்பதனால் இதன் டிஆர்பி-யில் எகிறியபடி உள்ளது. டிஆர்பி-யில் டாப் 3 பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்று உள்ளது.
இதில் பாக்கியலட்சுமியாக நடிக்கும் சுசித்ராவின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.அந்த வகையில் அண்மையில் சிறந்த நடிகைகக்கான விருதினையும் சுசித்திரா பெற்றுக் கொண்டார். மேலும் இந்த சீரியல் கோபியாக நடித்து வரும் சதீஷ் சீரியலை விட்டு விலகுவதாக கூறப்பட்டது.
இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சமீஷ் தான் கோபியாக தொடர்ந்து நடிக்கவுள்ளார்.இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் சுசித்ரா குஷியாக டான்ஸ் ஆடும் வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!