• Sep 20 2024

ஜீ தமிழின் புதிய சீரியலில் களமிறங்கும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்..யார் கதாநாயகி தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிலட்சுமி.இதில் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்ட பல ருவிஸ்ட் நடைபெறுகின்றது.

இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்து செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் ஆர்யன்.இவர் இந்த சீரியலில் இருந்து திடீரென விலக ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள்.

தற்போது இவருக்கு பதிலாக விகாஷ் சம்பத் நடித்து வருகின்றார்.ஆர்யன் வெளியேறியதன் பின் ரசிகர்களுக்கா பல பதிவுகளை இட்டு இருந்தார்.

இவ்வாறு இருக்கையில் எப்ப நடிக்க ஆரம்பிப்பீர்கள் என்றே பலரது கேள்வியாக இருந்தது.இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு குட்நியுஸ் வெளியாகி உள்ளது.

அதாவது ஜீ தமிழ் சேனலில் விரைவில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமியில் செழியன் என்ற கேரக்டரில் முன்பு நடித்த நடிகர் ஆர்யன் ஹீரோவாக லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவருக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியலின் கன்னட வெர்ஷனான 'பாரு' என்ற சீரியலின் கதாநாயகி மோக்ஷிதா நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் சீரியலில் டைட்டில், கதை உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே ஏற்கனவே பல சீரியலில் வில்லியாக நடித்துள்ள நடிகை சுபத்ரா, இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்யன் - ஷபானா ஜோடிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் நிலையில் முதல் முறையாக லீட் ரோலில் நடிக்க போகும் நடிகர் ஆர்யனுக்கு ஷபானாவின் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement