• Sep 21 2024

பாக்கியாவுக்கு சூப்பரான சர்ப்ரைஸ் கொடுத்த பழனிச்சாமி- கோபியிடம் உண்மையை உளறிய இனியா- கடும் கோபத்தில் கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கிச்சனில் பாக்கியா நின்று கொண்டு அமிர்தா ,எழில், ஜெனி மூவருடனும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரம் செல்வி வர எழில் பாக்கியா காலேஜிற்குப் போகும் விஷயத்தைச் சொல்ல, செல்வி சந்தோஷப்படுகின்றார். அப்போது செல்வி, அப்போ அக்கா இனி கான்டீனுக்கு வரமாட்டாவா என்று கேட்க பாக்கியா அதெல்லாம் வராமல் எப்படி கட்டாயம் வருவேன் என்று கூறுகின்றார்.


தொடர்ந்து இங்கிலீஸ் வகுப்புக்கு வரும் பாக்கியா பழனிச்சாமி மற்றும் லோபிகாவிடம் தான் காலேஜில் சேர்ந்த விஷயத்தைச் சொல்ல பழனிச்சாமி சந்தோஷப்பட்டு பாராட்டுகின்றார். அத்தோடு பாக்கியா நான் காலேஜிற்குப் போவதற்கு நீங்க தான் காரணம் ரொம்ப நன்றி என்று சொல்கின்றார்.பின்னர் பழனிச்சாமி சர்ப்ரைஸாக கேக் வர வைத்து பாக்கியா காலேஜிற்குப் போகப் போவதற்காக கேக் வெட்டிக் கொண்டாடுகின்றார்.

அத்தோடு எல்லோரும் பாக்கியாவைப் பாராட்ட பாக்கியா சந்தோசப்படுகின்றார். மறுபுறம் கோபி தனது நண்பரிடம் பாக்கியா காலேஜிற்குப் போகப் போகும் விஷயத்தைச் சொல்லி திட்டுகின்றார். இவ ஊரை சுத்திக்கிட்டு அந்த லாம் போஸ்ட் கூடவே எப்பவும் இருக்கிறா என்று திட்ட கோபியின் நண்பர் உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை அவங்க ஏதோ பண்ணிட்டு போறாங்க என்று சொல்கின்றார்.

இருந்தாலும் கோபி பாக்கியாவை திட்ட வேண்டும் என்பதற்காக இனியாவிடம் போன் பண்ணி வீட்டில் இருக்கிறவங்களை பற்றி விசாரிக்க இனியா, பாக்கியா இங்கிலீஸ் கிளாசிற்குப் போன விஷயத்தைச் சொல்கின்றார்.இதனால் கோபி அவளை நேர்ல போய் திட்டிட்டு வரப்போகின்றேன் எனக் கிளம்பிப் போகின்றார்.


இங்கே இங்கிலீஸ் கிளாசிஸ் பஃண்ணாக ஏதாவது பண்ணலாம் என்று ப்ரபோஷல் டாஸ்க்கினை வைக்கின்றார்கள். இப்போது பழனிச்சாமி  லோபிகாவை அழைத்து ப்ரபோஷல் பண்ணுகின்றார். தொடர்ந்து பாக்கியாவுக்கும் ப்ரபோஸ் பண்ண சொல்ல முதலில் மறுத்த பாக்கியா பின்னர் எழும்பி வந்து டாஸ்க்கில் கலந்து கொள்ள அந்த நேரம் கோபியும் உள்ளே வருகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement