• Nov 14 2024

கவலையில் இருக்கும் பாக்கியாவுக்கு பழனிச்சாமி கூறிய அட்வைஸ்ட்- குழப்பத்தில் இருக்கும் இனியா- எழில் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா இங்கிலீஸ் கிளாசில் இருக்கின்றார். அப்போது பழனிச்சாமி பா்கியாவிடம் நீங்க முதல் மாதிரி இல்லை. முதல் என்றால் கிளாஸ் தொங்க முதல் வருவீங்க கிளாஸ் முஞ்சப் பிறகும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பீங்க. இப்போ கரெக்ட் டைமுக்கு வந்து கரெக்ட் டைமுக்கு போறீங்க என்று சொல்ல பாக்கியா எனக்கு எப்போ எ்ன வேலை வரும் என்றே தெரில அதான் சீக்கிரமாவே கிளம்புறேன் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து லோன் விஷயம் எப்பிடிப் போச்சு என்று கேட்ட போது பாக்கியா லோன் வாங்கிறதில் ஒரு சிக்கல் இருக்கு என்கிட்ட தான் டிகிரி இல்லையே டிகிரி இருந்திருந்தால் கண்டிப்பா லோன் குடுத்திருப்பாங்க, அதான் என்னோட மருமகள் யாருடைய பெயரிலாவது லோன் எடுக்கலாம் என இருக்கிறேன் என்று சொல்கின்றார்.

அப்போது பழனிச்சாமி பேசாமல் நீங்க காலேஜில் சேர்ந்து படிச்சிட வேண்டியது தானே என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் முடியுமா என்று கேட்க பழனிச்சாமி மற்றவங்களை கஷ்டப்படுத்திறதை விட படிச்சு வைச்சீங்க என்றால் நல்லது தானே உங்களுக்கு தான் படிக்கிறது பிடிக்குமே பேசாமல் நீங்களே படிச்சு ஒரு டிகிரியை வாங்கிக்கோங்க என்று சொல்கின்றார்.

தொடர்ந்து தான் காலேஜில் சேரனும் படிக்கனும் என்று ஆசையாக இருப்பதாக பாக்கியா எழிலிடம் சொல்கின்றார். இனியா வயசில எனக்கு கல்யாணம் ஆகிடுச்ச என் வயசுப் பொண்ணுங்க காலேஜிற்கு போனப்போ நான் குந்தைகளை வைச்சிட்டு இருந்தேன். இப்போ இனியா காலேஜிற்கு போறதைப் பார்த்தால் எனக்கும் போகனும் போல இருக்கு என்று கூற எழில் அட்மிஷன் எடுத்துக் கொண்டு வந்து பாக்கியாவிடம் கொடுத்து நீ போய் படியம்மா, உன்னால முடியும் என்று அட்மிஷனை நிரப்பி கொடுக்கின்றார்.


இதனால் வீட்டில் செம சந்தோஷத்தில் இருக்கும் பாக்கியா வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் கதை கதையாக சொல்கின்றார். ஒரு அம்மாவும் பையனும் காலேஜில் ஒன்றாகப் போய் படிக்கிறாங்க என்று நியூஸ் பேப்பர்ல வந்திச்சு என்றெல்லாம் சொல்ல இனியா நீ எதுக்காக இப்பிடிப் பேசுற உன் நடையே சரி இல்லையே என்று சொல்ல எழில் பாக்கியா காலேஜில் சேர்ந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

அப்போது ராமமூர்த்தி உன்னால முடியும் என்றால் போய் படியம்மா என்று சொல்ல செழியனும் அதையே சொல்கின்றார். ஆனால் இனியா என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement