• Nov 19 2024

முதன் முறையாக பாக்கியாவுக்கு ஐ லவ் யூ சொன்ன பழனிச்சாமி- இதயம் நொறுங்கிப் போய் நின்ற கோபி- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்காக தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பாக்கியலட்சுமியின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாகவே பல பெண்கள் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அதிலும் பெண்கள் மட்டுமல்லாமல் தற்போது பல ஆண்களும் கூட இந்த சீரியலை தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 

தன்னை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து பல ஆண்டுகளாக தனக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் தராமல் இருந்த கோபி தன்னை விட்டு போனால், அதை நினைத்து கவலைப்பட்டு வீட்டில் முடங்கி இருக்காமல் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்கியா அதிரடியாக தன்னை தைரியமாக மாற்றிக் கொண்டுள்ளார்.


 தன்னை சுற்றி இருக்கும் சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து கொண்டு இருக்கிறார்.இதனால்தான் மற்ற சீரியல்களை விடவும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனித்துவமாக தெரிவதால் டிஆர்பியில் விஜய் டிவியில் முதல் இடத்தை பல மாதங்களாகவே பிடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது கோபி பாக்கியாவைப் பார்ப்பதற்காக ஸ்போக்கின் இங்கிலிஸ் கிளாசிற்கு வருகின்றார். அங்கே பழனிச்சாமி பாக்கியாவிடம் ஐ லவ் யூ சொல்ல கோபி அதைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றார்.பாக்கியாவும் பழனிச்சாமியால் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement