• Sep 20 2024

முதன்முறையாக தனது மகனின் பெயரை அறிவித்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை- கியூட்டான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்களுக்கு தான் இப்போது ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே சினிமா என்று ஆசைப்படும் பலரும் முதலில் சின்னத்திரையில் தான் காலடி எடுத்து வைக்கிறார்கள்.


அப்படி பல தொடர்களில் நாயகியாக நடித்து மக்களிடம் பெயர் பெற்றவர் தான் நடிகை அனு. இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்து வருகின்றார். இந்த தொடரில் ஆரம்பத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் தற்பொழுது பாசிடிவ் ரோலில் நடித்து வருகின்றார்.


மேலும் விக்னேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட அனு பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமானார். நிறைய போட்டோ ஷுட்கள் கூட வெளியிட்டிருந்தார். அண்மையில் தான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


தற்போது தனது மகனுக்கு வான் வியன் என்று பெயர் வைத்துள்ளதாக அனு புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதனால் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement