• Sep 20 2024

சீரியலில் மட்டுமல்லாது நிஜயத்திலும் கர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் தொடர் நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த பல பிரபலங்கள் இருக்கின்றனர். இவர்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் நடிகை அனு. இதனை அடுத்து ஷு தமிழ்  சன்டிவி போன்ற சேனல்களிலும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்பொழுது நல்ல கதாப்பாத்திரமாக மாறியுள்ளார்.


மேலும் இவர் சில வருடங்களுக்கு முதல் தனது காதலனான விக்னேஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கிறார், தற்போது 4வது மாதமாம். அண்மையில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.


தற்போது பாண்டவர் இல்லம் சீரியலிலும் ரோஷினி கதாபாத்திரம் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் காட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement