• Sep 21 2024

கவலைகளை மறந்து... செம ஜாலியாக இருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம்... வைரல் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்களிடையே பிரபலமாக பேசப்படும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மளிகை கடை வைத்து நடத்தி வரும் அண்ணன் தம்பி நால்வரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இத்தொடர் அமைந்திருக்கும். இப்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.


அதிலும் மூத்த மருமகளாகவும், அண்ணியாகவும் வரும் தனத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை அதில் வெளிப்படுத்தி இருப்பார் நடிகை சுஜிதா. 

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் படி தற்போது தனம் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த விடயம் மீனாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது.வேறு யாருக்கும் இந்த விடயம் தெரியாது. தனமும் யாரிடமும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றார். இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றது.


இவ்வாறாக நடிகை சுஜிதா சீரியலில் எந்தளவிற்கு ஆர்வமாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் தற்போது கவலைகளை மறந்து செல்லப்பிராணியாக நாய்க்குட்டியுடன் ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement