தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகப்படியான மக்களின் மனங்களை கவர்ந்த சீரியலாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் ஒரு கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி சூப்பராக போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா.
ஹேமா நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அதைவிட சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார்.
அதேவேளை ஹேமா தான் செல்லும் இடங்களில் உள்ள வித்தியாசமான விஷயங்களையும் அதில் பகிர்ந்து வருகின்றார்.
இது ஒருபுறம் இருக்க ஹேமா இடையிடையே தனது மாறுபட்ட போஸ்களில் போட்டோசூட்களை நடத்தி அந்த படங்களை தனது சமூகவலைத்தளங்களில் பதவிட்டு வருகின்றார்.
இப்படி இருக்கையில் தற்போது ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டில் க்யூட்டான லுக்கில் எடுத்த போட்டோஸ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!