• Sep 20 2024

முடிவுக்கு வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்... வெளியானது தேதி... கடைசி எபிசோட்டில் நடக்கப்போவது இதுதான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதிலும் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 


மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லை, கண்ணன்-ஐஸ்வர்யா என இதில் நடித்து வருபவர்கள் அனைவரும் பிரபலமாகி விட்டனர். இந்த சீரியலின் கதைப்படி பல போராட்டங்களில் பின்னர் குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து விட்டதோடு தமது புது வீட்டுக்கும் சென்று விட்டனர். அத்தோடு தனத்திற்கு கான்சர் என்ற விஷயமும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.


இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் விரைவில் முடிவடைந்து 2வது சீசன் தொடங்க இருக்கிறது என ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. 


இதனையடுத்து தற்போது இந்த சீரியல் முடிவடையும் தேதியும் வெளியாகி விட்டது. அந்தவகையில் தனத்திற்கு உடல்நிலை சரியாகி குடும்பமே சந்தோஷமாக இருப்பது போல் கதையமைத்து செப்டம்பர் 30-ஆம் தேதியோடு தொடரை முடித்து விடுவார்கள் எனக் கூறப்படுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement