விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் ஒன்றாக வாழ்வது என சீரியல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்த அண்ணன்-தம்பிகளுக்குள் விரிசல் ஏற்பட்ட தனித்தனியாக வாழ்கிறார்கள்.
கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்காது என்பது போல் தெரிகிறது.இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் வெங்கட் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துகொண்டிருக்கிறது.
ராதிகாவின் ராடர்ன் நிறுவனம் தயாரிப்பில் சஞ்சீவ்-ரேஷ்மா முக்கிய ரோலில் நடிக்க புதிய தொடர் பூஜை போடப்பட்டது.படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே சஞ்சீவ் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக தொடரில் வெங்கட் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வர அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Listen News!