தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் எல்லா சீரியல்களிலும் தற்போது டாப் 3 இடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சகோதர உறவை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். 2018ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 975 எபிசோடுகளை கடந்துள்ளது. விரைவில் 1000 எபிசோடை தொட இப்போதே ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் பிரபலமான ஜோடி கதிர் மற்றும் முல்லை தான். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரனுக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் எனலாம் .
பின்னணி நடன கலைஞராக இருந்து இப்போது பிரபலமாகியுள்ளார். இத் தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.
குமரன் சுஹாசினி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதுவரை குமரன் தனது மகனின் புகைப்படத்தை ஷேர் செய்தே இல்லை.
தற்போது குமரன்-சுஹாசினியின் மகனின் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!