• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு-ரசிகர்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கென தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுமுகங்கள் மற்றும் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களுடன் தொடங்கப்பட்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறதுஅண்ணன்-தம்பிகள், கூட்டு குடும்பம் இவை பற்றி தான் தொடர் விவரிக்கின்றது.


இப்போது இந்த வார ப்ரோமோவில் புதிய காரை வாங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொண்டாடுகிறார்கள்.இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் பல மொழிகளில் சீரியல்கள் நடித்து வருகிறார், பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் தொடர் முடிந்துவிட்டது


தற்போது தெலுங்கில் கீதாஞ்சலி என்ற தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம், இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான செவ்வந்தி தொடரின் ரீமேக் என கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement