தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிக்குப் பேர் போன நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகின்ற இவர் தமிழிலும் உச்ச நட்சத்திர நாயகர்களான ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்திருக்கின்றார். இதனால் இவரிற்கு தமிழிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தற்போது ‘யுத்திரா’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகின்றார்.
நடிகைகளைப் பொறுத்தவரையிலும் படங்களில் எந்தளவிற்கு பிஸியாக நடிக்கின்றார்களோ அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் பொழுதைக் கழிக்க மறப்பதில்லை. நடிகை மாளவிகா மோகனனும் இதற்கு ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல. இவர் இடைவிடாது படங்களில் நடிப்பது போலவே சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருபவர்.
அதனையும் விட கவர்ச்சி உடைகளில் அலாதி பிரியம் உடையவர். இவரது கவர்ச்சிப் புகைப்படங்களை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. எனினும் இவர் படு கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவதனால் இது பிடிக்காத நெட்டிசன்கள் இவரிடம் அத்துமீறிக் கேள்வி கேட்பதும் உண்டு. ஆனால் மாளவிகா மோகனன் இவை எதற்குமே அஞ்சியது கிடையாது. தொடர்ந்தும் தன் இஷ்டப்படியே நடந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் வெள்ளை உடையில் ஹொட் போட்டோஸை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!