தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் இறுதியாக பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தயாரித்து இருந்தார்
இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பிரபல விஜே மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மேலும் 2000த்துக்கு பின் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக பரிச்சயமானவர் விஜே மகாலட்சுமி சமீபகாலமாக சீரியலில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர்கள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இதுகுறித்து அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் தம்முடைய வலைப்பக்கத்தில், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!'” என பதிவிட்டு விஜே மகாலட்சுமிக்கு தாலி கட்டும் திருமண புகைப்படங்களை பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த இருவரும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தமது ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்..
இதோ அந்த புபை்படங்கள்...
Listen News!