புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் நடிகர் பார்த்தீபன். இந்த முதல் படத்திலேயே சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கு தேசிய விருதை பெற்றார்.
வித்தியாசமான கதைக்களங்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்தீபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் ஒரு நடிகரை வைத்து மட்டும் எடுக்கப்பட படமாக அமைந்தது.
இத்திரைப்படம் 2019-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தோடு பல விருதுகளையும் வென்றது. எல்லைகளைத் தாண்டி இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அபிஷேக் பச்சன் நடிப்பில் சிங்கிள் சைஸ் 7 என்ற பெயரில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அபிஷேக் பச்சனின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப இந்தியில் ரீமேக் செய்யப்படும் போது கதையில் சிறிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறிய பார்த்திபன், சிறிய ஹீரோயிஸம் தருணங்கள் இருக்கும் ஆனால் அதிகமாக இருக்காது என்று கூறினார். இந்நிலையில் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
கடந்த வாரம் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பார்த்திபன் தனது ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் விரைவில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் என்று தெரிவித்தார். தேசிய விருதுகளை வென்றுள்ள இப்படம் இப்போது ஹாலிவுட்டில் அதே பாணியில் உருவாகி வருவதாக பார்த்திபன் கூறியுள்ளார்.
Listen News!