• Sep 20 2024

ரோபோ ஷங்கருக்கு முத்தம் சர்ச்சைக்குப் பதிலடி கொடுத்த பார்த்திபன்- குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இயக்குநராக வலம் வருபவர் தான் பார்த்திபன். இவர் இயக்கத்தில் தற்பொழுது இரவின் நிழல் என்னும் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் நடைபெற்றது.இதில், மேடையில் பேசிக்கொண்டிருந்த பார்த்தீபன், தீடீரென மைக்கை தூக்கியெறிந்தார். அது நடிகர் ரோபோ ஷங்கரின் மேல் விழுந்தது.

இந்த சம்பவம் தொடர்ந்து சில நாட்களாக சமுக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சியாக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்து பார்த்திபனும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். மேலும், இதற்காக சம்மந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், அனைத்து சர்ச்சைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரோபோ ஷங்கருக்கு முத்தம் கொடுத்து தனது ஸ்டைலில் பதிவு ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement