• Sep 20 2024

‘பத்தல பத்தல’.. விக்ரம் படத்தின் வீடியோ பாடல் வெளியானது- இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் மிகவும் ஆக்டிவாக வித்தியாசமான ரோல்களில் நடித்து அதிகமான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் கடந்த நான்கு வருடங்களாக அரசியல் பிக்பாஸ் தொகுத்து வழங்குவது என பிஸியான காரணங்களினால் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. அவர் படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. இந்த நான்கு ஆண்டுகளில் பிற்பாடு புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்தவகையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் திரைப்படம். கடந்த ஜூன் 3 வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில்,காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் போன்றோரும் கவுரவ தோற்றத்தில் நடிக்க சூர்யாவும் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கையில் உலகம் முழுவதும் சுமார் ரூ.410 கோடி வரை வசூலித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தின் “பத்தல பத்தல” பாடல் மிகவும் பிரபலமானது. பாடல் உலகநாயகனின் குரலில் அனிருத் இசையில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல பத்தல” பாடலில் இடம்பெற்றிருந்த ஒன்றியத்தின் தப்பாலே போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டன. முன்னதாக இந்த வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கண்டன குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்தப் பாடல் இணையத்தில் பெரிய அளவில் ரசிகர்களால் பாரட்டப்பட்டது. யூடியூபில் 5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement