பாலிவுட் சினிமாவில் 'பாட்ஷா, சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது 'பதான்' படம் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படமானது, வரும் 25-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் வில்லனாக ஜான் ஆபிரஹாமும் நடித்துள்ளனர். அத்தோடு ஷாருக்கான் ரகசிய உளவாளியாக நடித்துள்ள இப்படமானது முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாது 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்நிலையில் பதான் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். ஆனால், தீபிகா காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருந்ததால் அது மிகப் பெரிய சர்ச்சையாக பல இடங்களிலும் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து மத்திரபிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் அஹமதாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் பாய்காட் பதான் என ட்ரோல் செய்தும் வந்தனர்.
இவ்வாறான பல சர்ச்சைக்கு மத்தியில் ஏற்கனவே கடந்தாண்டு வெளியான சில இந்தி படங்கள் பாய்காட் பிரச்சினையில் சிக்கி படுதோல்வியடைந்தன. அதனால் பதான் படத்தின் வசூலும் பாதிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்படமானது யாருமே எதிர்பார்க்காத வகையில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கிலேயே அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக கேஜிஎஃப், பொன்னியின் செல்வன் படங்களின் மொத்த வசூலையும் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் மூலம் முறியடித்துள்ளது பதான் திரைப்படம். இந்த சாதனையெல்லாம் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தான் நடந்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அந்தவகையில் கடந்தாண்டு ரிலீஸான கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஜெர்மனியில் 144 ஆயிரம் யூரோ கலெக்ஷன் செய்து குவிதித்திருந்தது. அதேபோல், மணிரத்னத்தின் கனவுப் படமாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐரோப்பா நாடுகள் முழுவதும் 155 ஆயிரம் யூரோ கலெக்ஷன் செய்திருந்தது.
இந்நிலையில் தான் தற்போது இந்த இரண்டு சாதனைகளை பதான் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங் மூலமே முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது பதான் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் இதுவரை 150 ஆயிரம் யூரோக்கு நடந்துள்ளதாம். இதனால் பதான் படக்குழுவினரும் ரசிகர்களும் உற்சாகத்தில் மிகுந்த உள்ளனர். அதுமட்டுமல்லாது ரிலீஸுக்கு பின்னர் இந்த வசூல் மென்மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!