• Sep 20 2024

விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளி... வெறும் 3நாட்கள் முடிவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பதான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் ஹீரோவான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜீரோ' படமானது கடைசியாக 2018-ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து 'லால் சிங் சத்தா, ராக்கெட்ரி, பிரம்மாஸ்த்ரா' போன்ற படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்தாரே தவிர முழு படம் எதிலும் இவர் நடிக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் 'பதான்'. இப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க சிறப்பு தோற்றத்தில் கடைசியில் சல்மான் கானும் நடித்து அசத்தியிருப்பார். 


இந்நிலையில் இப்படமானது 2023, ஜனவரி 25-ஆம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. மேலும் இப்படமானது ரிலீஸிற்கு முன்பே நிறைய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக இன்றுவரை ஓடிக் கொண்டிருக்கிறது. 


அதுமட்டுமல்லாது எல்லா இடங்களிலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது. அந்தவகையில் படம் வெளியாகி தற்போது 3 நாள் முடிவடைந்த நிலையில் இப்படம் மொத்தமாக ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு சில ரசிகர்கள் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு பட மொத்த கலெக்ஷனையும் 3 நாட்களில் ஷாருக்கான் படம் வசூல் செய்துள்ளதாக பதிவுகள் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement