நடிகர் ஷாருக்கான் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு “பதான்” திரைப்படம் வெளியாகியுள்ளதால், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதைக் குறித்தது. பதான் திரைப்படம் ஜனவரி 25 அன்று வெளியானதிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆக்ஷன் ஸ்பை-த்ரில்லர் திரைப்படம் ஏற்கனவே உலகளவில் ரூ.850 கோடியைத் நெருங்கி மாபெரும் சாதனை படைத்தும், இப்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.526 கோடியை நோக்கி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போதைய பாக்ஸ் ஆபிஸின் அறிக்கையின்படி, வெளியான 13 நாட்களில் சுமார், ரூ.850 கோடியை நெருங்கிய பதான் திரைப்படம் விரைவில் ரூ.1000 கோடியை தொடுவதில் சந்தேகமில்லை என்றே சொல்லலாம்.
ஏற்கனவே, பாகுபலி மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற திரைப்படங்கள் ரூ.1000 கோடி சாதனை செய்துள்ள நிலையில், மிக விரைவில் ஷாருக்கானும் அந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோரும் நடித்துள்ளனர். பதானுக்குப் பிறகு, ஷாருக்கான் அட்லீயின் ஜவான், படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!