• Nov 10 2024

பென்சில் பட இயக்குநர் திடீர் மரணம்- பரிசோதித்து கைவிட்ட மருத்துவர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் கௌதம் வாசுதேவனின் உதவி இயக்குநராக இருந்தவர் தான் மணி நாகராஜ். இவர் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய பென்சில் திரைப்படத்தின் மூலம் இயக்குநாக அறிமுகமாகினார். இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை கவனித்து வந்தார். அதிலும் மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த டைமண்ட் நெக்லஸ் மற்றும் Zachariayude Garbhinikal ஆகிய திரைப்படங்களில் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றிருந்தார். 


அதில் Zachariayude Garbhinigal படத்தை நீயா நானா கோபிநாத் நடிப்பில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.இந்த நிலையில் இன்று மதியம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணி நாகராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மணி நாகராஜ் திருச்சியை சேந்தவர், அவருக்கு 46 வயதுதான் என்பதும் முக்கியமாகும். இவரது இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement