தென்னிந்தியா திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சாய் பல்லவி. 'பிரேமம்' படம் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இவர் தன்னக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறுஇருக்கையில் நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில் தனது ஆடை குறித்து பேசியுள்ள விஷயம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் 'என்ஜிகே', வெற்றிமாறனின் 'பாவ கதைகள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி. அத்தோடு கடந்தாண்டு வெளியாகி விமர்சனரீதியாக பெரும் வரவேற்பினை பெற்ற 'கார்கி' படத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் இந்தப்படத்தை வெளியிட்டது.
மேலும் இவருக்கு சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தாலும் கமர்ஷியல் படங்கள், கதாநாயகர்களுடன் டூயட் ஆட்டும் படங்களில் மட்டும் நடிக்காமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.அத்தோடு தமிழ், தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இவ்வாறுஇருக்கையில் படங்களில் எப்போதும் ஹோம்லியான லுக்கில் நடித்து வரும் தான் ஏன் கிளாமர் உடைகள் அணிவதில்லை என்பதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், நான் ஜார்ஜியாவில் படிக்கும் போது, டேங்கோ நடன போட்டிக்காக ஸ்லிட் டிரெஸ் உடை அணிய வேண்டியிருந்தது. அந்த உடையில் நடனமும் ஆடினேன். ஆனால் 'பிரேமம்' படம் வெளியாகி பாராட்டுக்களை பெற்ற போது எனது டேங்கோ நடன ஈடியோ வைரலானது.
மேலும் அந்த வீடியோவை பார்த்ததும் மக்கள் என்னை பாராட்டுவதை நிறுத்திவிட்டு விமர்சிக்க ஆரம்பித்தனர். இதனால் நான் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தேன். அந்த சமயத்தில் தான் படங்களில் குட்டை உடையில் நடிக்கக்கூடாதென்ற முடிவை எடுத்தேன். ஒருவரின் உடையை வைத்து நம்மால் அவரின் குணத்தை மதிப்பிட முடியாது. என்னுடைய உடை எனது ஆளுமையை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
நடிகை சாய் பல்லவி அடுத்தததாக 'எஸ்கே 21' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்தப்படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சாய் பல்லவிக்கு வெயிட்டான ரோல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!