‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார் அட்லீ. அதனைத் தொடர்ந்து பின்னர் விஜய் நடிப்பில் ‘தெறி’ எனும் படத்தை உருவாக்கியிருந்தார். இப்படம் மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருந்தது.
தெறி படத்தைத் தொடர்ந்து இவர் மறுபடியும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படங்களும் வெற்றிப் படங்களாக மாறி இவருக்கு புகழையும் வெற்றியையும் தேடிக் கொடுத்திருந்தன.
இந்நிலையில் அட்லீ ‘பிகில்’ படத்திற்கு பிறகு தற்போது பாலிவுட் ஹீரோவான ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எனும் படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.
அட்லீக்கு பாலிவுட்டில் வெற்றி கிடைக்குமா என ரசிகர்களும் அதிகம் ஆர்வத்துடன் படத்திற்காக காத்திருக்கின்றனர்.
பாலிவுட்டில் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் அளித்திருக்கும் பேட்டியில் 'ஏன் தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுகின்றன, ஹிந்தி படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன' என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
அதாவது ஹிந்தி தெரியாதவர்கள் இங்கு ஹிந்தியில் படம் எடுத்து கொண்டிருகிறார்கள், தமிழ் - தெலுங்கில் அந்த நிலை இல்லை. அவர்களது கலாச்சாரத்துடன் அது ஒன்றி இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் ஹிந்தியில் படம் எடுப்பதால் அது rooted ஆக இருப்பதில்லை.
மேலும் இந்த நிலை மாறினால் ஹிந்தி படங்களும் வெற்றி பெறும் என அனுராக் காஷ்யப் தெரிவித்து இருக்கிறார்.
Listen News!