• Sep 21 2024

மேளதாளத்துடன் உள்ளே சென்ற ஐவர்! அய்யய்யோ.. அந்த கதவ லொக் பண்ணுங்க பிக்பாஸ் - பதறியடித்து ஓடிய ஹவுஸ்மேட்ஸ்! வெளியானது ப்ரோமோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும், அனன்யா ராவ்,பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.


இந்த நிலையில், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். 

அதன்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்களாக சீரியல் நடிகை அர்ச்சனா, கானா பாடகர் கானா பாலா, ரியோவின் நண்பரும் தொகுப்பாளருமான பிராவோ, மேடை பேச்சாளர் பாரதி மற்றும் நடிகை ரக்‌ஷிதாவின் கணவர் தினேஷ்  ஆகிய 5 பேரும் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். 


மேலும், குறித்த 5 வைல்டு கார்டு எண்ட்ரிகளையும் மேளதாளத்துடன் உள்ளே அனுப்பி வைத்துள்ளார் நம்ம கமல். இவ்வாறு ஒரே நேரத்தில் 5 பேர் எண்ட்ரி கொடுத்ததை பார்த்து ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ், 'அய்யய்யோ அந்த கதவ லொக் பண்ணுங்க பிக் பாஸ்' என பயத்தில் இருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது. 


இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் சென்ற இந்த வைல்டு கார்டு போட்டியாளர்களின் வரவால் இனி என்னென்ன டுவிஸ்ட் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



Advertisement

Advertisement