• Nov 10 2024

மக்கள் சொல்லும் கருத்து தான் நிஜமானது- மாமன்னன் படம் குறித்து மாரி செல்வராஜ் அளித்த பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

 உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் மாமன்னன்.உதயநிதி ஸ்டாலினுக்கு அண்மையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார்.

மாமன்னன் தான் இவரது இறுதிப்படம் என்றும் அறிவித்திருந்தார்.கடந்த சில மாதங்களாகவே இணைய தளம், ஊடகம்,பத்திரிக்கை என எதை எடுத்துக்கொண்டாலும் மாமன்னன் படம் குறித்த பேச்சாகவே இருந்தது.  இன்று வெளியான படத்திற்கு ட்விட்டர் விமர்சனம், பொதுமக்கள் விமர்சனம் என பாசிடிவ் விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது. மாரிசெல்வராஜ் சம்பவம் செய்துவிட்டதாகவும் கிழிகிழி என்று கிழித்துவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சென்னை காசி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது என்னுடைய 3வது படம் இன்று வெளியாக உள்ளது. இந்த படம் உருவாக காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், ஏ.ஆர்.ரஹ்மான் என அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த படத்தில் என்னுடைய எமோஷன், நிச்சயமா ஒரு நல்ல படமாகவும் முக்கியமான படமாகவும் இருக்கும். மக்கள் இப்படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு கொடுத்திருக்காங்க. அதன் நோக்கத்தையும் தேவையையும் கண்டிப்பா இப்படம் பூர்த்தி செய்யும். படம் குறித்து எழுந்த பல சர்ச்சைகளுக்கு படம் நிச்சயம் பதில் சொல்லும். படம் மக்களை வெல்லும் என நம்புகிறேன். மக்கள் சொல்லும் கருத்து தான் நிஜமானது. உதயநிதி அவருடைய கடைசி படம் என்று தான் என்னை அழைத்திருந்தார். அவர் எதற்காக என்னை அழைத்தாரோ அப்படி ஒரு நல்ல படமா மாமன்னன் இருக்கும் என்றார்.


Advertisement

Advertisement