• Nov 14 2024

பெத்த அப்பாவே நீங்க தான்-பாரதி கைக்கு கிடைத்த டி என் ஏ ரிசல்ட்- சௌந்தர்யாவிடம் உண்மையை மறைத்த அகிலன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா சௌந்தர்யா உட்பட எல்லோரும் ஹேமாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர அவரை ஐஸ்.சி.யூ-க்குள் அழைத்துச் செல்கின்றனர். அடுத்து சௌந்தர்யாவின் கணவர் வேணுவும் ஹாஸ்பிடலுக்கு வர சௌந்தர்யா அவர் மீது சாய்ந்து கண்கலங்கி அழுகிறார். அவர் ஹேமாவுக்கு எதுவும் ஆகாது என ஆறுதல் கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி இன்னைக்கு தான் டெஸ்ட் ரிசல்ட் வரப்போகுது நான் வாழ்வதும் சாவதும் கண்ணம்மா கையில் தான் இருக்கிறது என கூறுகிறார். டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் நல்லபடியாக வந்தால் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளோடு சேர்ந்து வாழ்வேன். ஒருவேளை கண்ணம்மா தவறு செய்திருப்பது உறுதியானால் என்னுடைய மரணத்திற்கு அவள் தான் காரணம் என இந்த மாத்திரையை சாப்பிட்டு என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என முடிவெடுக்கிறார்.


இந்த பக்கம் ஹேமாவை பரிசோதனை செய்த டாக்டர் வெளி காயம் மட்டும் தான் இருக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும் என சொல்ல எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு அகிலன் பாரதி பற்றி கேட்க சௌந்தர்யா நானும் போன் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். சுவிட்ச் ஆப்னு வருது, டெல்லிக்கு ஏன் போனான்? எதுக்காக போனான்னு ஒன்னும் புரியல என சொல்ல அகிலன் டி என் ஏ ரிசல்ட் வாங்க டெல்லிக்கு போய் இருப்பான் என புரிந்து கொள்கிறார். பிறகு இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லலாமா என யோசித்து வேண்டாம் என முடிவெடுத்து வருகிறார்.

அதன் பின்னர் பாரதி டாக்டரை சந்தித்து டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் குறித்து கேட்க அவர் எதுக்காக இந்த ரிசல்ட் எடுக்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என கேட்க பாரதி இதுவரை தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறுகிறார். அடுத்து பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் மேட்ச் ஆகுதா என கேட்க பெத்த அப்பா இங்க இருக்கும்போது எப்படி மேட்ச் ஆகாம இருக்கும் என டாக்டர் சொல்ல பாரதி ஷாக்காகி மீண்டும் கேட்கிறார்.


இந்த மூணு பிளட் சாம்பலும் டிஎன்ஏ பக்காவா மேட்ச் ஆகுது என கூற பாரதி தான் செய்த தவறுகளை உணர்கிறார். இவ்வளவு நாளா நீங்க உங்க மனைவியை தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க என டாக்டர் கூறுகிறார். இதனால் பாரதி கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement