• Sep 20 2024

போட்டோ ஷுட்டடில் இறங்கிய கமல்ஹாசன்-கலக்கும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா மிகப் பிரமாண்டமாக ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

இந்திய சினிமா பிரபலங்கள் பலர் அதில் கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றன. ஹிந்தி சினிமா பிரபலங்கள், தமிழ் சினிமா பிரபலங்கள் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் கேன்ஸ் விழாவில் விதவிதமான ஆடைகளை அணிந்து போட்டோ ஷுட்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் ரசிகர்களித்தே தீயாய் பரவி வருகின்றது.

நடிகைகள் மட்டும்தான் போட்டோ ஷுட் நடத்த வேண்டுமா? எனக் கேட்பது போல் கமல்ஹாசனும் அங்கு நடத்திய ஒரு போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.

நரைத்த தலைமுடி, தாடி, மீசையுடன் கோட், கூலிங் கிளாஸ் அணிந்து கமல்ஹாசன் தோற்றமளிப்பது ஹாலிவுட் நடிகரைப் போல உள்ளது. அப்படியே ஹாலிவுட்டிற்கும் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வாங்க தலைவா என அவர்களது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

அந்த புகைப்படங்கள் சிலவற்றை கமல் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement