• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டான்லி எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யாருமே இத பார்த்ததில்லை!

tech / 2 years ago

Advertisement

Listen News!

நடிகரும் தயாரிப்பாளருமாக சினிமாவை கலக்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து 2 படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் தலைப்பிடாத ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த தலைப்பிடாத படத்திற்கு கழகத்தலைவன் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திடாத இந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.

இதோ அந்த புகைப்படம்

Advertisement

Advertisement