தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். 'பிரேமம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அத்தோடு இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமாகி இருக்கின்றார். மேலும் தமிழில் 'கொடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அத்தோடு சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'Freedom@Midnight' எனும் குறும்படம் பல இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தது இருக்கின்றது. அத்தோடு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் இவருக்கு உருவாகி இருக்கின்றது.
எனினும் இவர் தற்போது தெலுங்கில் தான் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வெளியான 'கார்த்திகேயா 2' என்ற படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்த ஹிட்டுக்கு பிறகு ஒரு பாலிவுட் பட நிறுவனம் ஒன்று அனுபமாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால் கூடிய சீக்கிரமே அனுபமா மும்பை சென்று அந்த படத்தில் ஒப்பந்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
படங்களில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கின்ற அனுபமா தற்போது மெஸ்ஸி ஹேரில், சாதாரண டீ-ஷர்ட் மற்றும் வித் அவுட் மேக்கப்பில் க்யூட்டான போஸ்கள் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்கள் ஆனவை இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
Listen News!