சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல நடிகர்கள், நடிகைகள் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறியவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.
இவரைப் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒருவரே ரோபோ ஷங்கர். அந்தவகையில் தொலைக்காட்சி முதல் திரைப்படங்கள் வரை அவரது பயணம் காமெடி நடிகனாகவே தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
மேலும் வெள்ளித்திரையில் 'தீபாவளி' என்ற படம் மூலம் தனது சினிமாப் பயணத்தை தொடங்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது பல முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து அசத்தி இருக்கின்றார். டாப் காமெடி நடிகர்கள் என்று எடுத்தால் அந்த டாப் லிஸ்டில் இவரது பெயர் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறது.
இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கருக்கு சமீபத்தில் 22-ஆம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் 'ஜெயிலர்' படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார் ரோபோ ஷங்கர்.
அந்தவகையில் இப்படப்பிடிப்பில் ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன.
Listen News!