• Nov 17 2024

பீட்டர் பால் இறந்த நிலையில்... ராபர்ட் மாஸ்டருடன் மீண்டும் நெருக்கம் காட்டுகிறாரா வனிதா...? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகை வனிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் பிரபலமானார். வனிதாவும் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இருப்பினும் ஒரு சில ஆண்டுகளிலேயே தனது கணவரை பிரிந்த வனிதா அவரை விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார் வனிதா. அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார்.


இதன் பின்னர் டான்ஸ் மாஸ்டரான ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த வனிதா, அவரையும் பிரிந்தார். இவ்வாறாக ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.


ஆனால் அவர் குடி போதைக்கு அடிமையானவர் என்ற காரணத்தினால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரையும் பிரிந்தார். இந்த நிலையில் குடிபோதை காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பீட்டர் பால் நேற்றைய தினம் உயிரிழந்தார். இதற்குப் பெயர் குறிப்பிடாமல் வனிதாவும் இரங்கல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் மீண்டும் ராபர்ட் மாஸ்டருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் "3ஆவது கணவர் இறந்த நிலையில் இது எல்லாம் தேவை தானா?" எனக் கூறி விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement