இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான்-இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த மாதம் 25ம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் லிகர்.
அந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரனாக விஜய் தெவர் கொண்டா நடித்திருப்பதோடு கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகின்றார்.
இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருகின்றனர். படம் இன்னும் 8 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது.இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Listen News!