விஜய் ஆண்டனி நடிப்பில் 2016- ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்'. சசி இயக்கியிருந்த இப்படமானது அம்மா சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் விஜய் ஆண்டனியின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து 6 ஆண்டுகளுக்குப் பின் 'பிச்சைக்காரன் 2' படம் உருவாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. அத்தோடு விஜய் ஆண்டனியே படத்தை இயக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் இப்படத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் உடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், பாரதிராஜா, பாக்யராஜ், இயக்குநர் சசி, மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் வந்து அனைவரையும் அசத்தினார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகை காவ்யா தாப்பர் வைர மோதிரத்தை பிச்சைப் போட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு எல்லை இல்லையா. பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இப்படியா வருவது என சரமாரியாக கூல் சுரேஷை கழுவி ஊற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!