பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் ஜானி டெப்.இப்படத்தில் இவருடைய நடிப்பு பேச்சு ஸ்டைல் என்பன இவரை உலகு அறியச் செய்ததோடு இவரக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆம்பல் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை பிரபலமானது.
இதனைத் தொடர்ந்து 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப், ஆம்பல் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவில் ஜானி டெப்க்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில்தான் ஜானி டெப் தமது அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியின் பிரபல ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானி என்கிற கலைஞரின் வாழ்க்கை வரலாற்று படத்தைதான் திரைப்படமாக எடுக்கவிருக்கிறார் ஜானி டெப்.இந்த படத்தை நடிகர் அல் பசினோ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!