விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் என்ற பெயரில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி அதன்முலம் பெரிய லாபம் பார்த்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், பிக்பாஸ் வீட்டில் நடைபெறுகின்ற கருத்துரையாடல் எப்படி நடைபெறுகிறது? ஒரு கட்டத்தில் அதுவே பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. இவாறான பிரச்சினைகள் தான் அந்த ஷோக்கிற்கு இருக்கும் ப்ளஸே. இப்படியான காட்சிகளை காட்டி ரசிகர்களை இழுப்பதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் தான் குறித்த நிகழ்ச்சியின் டிஆர்பி உயரம். எனினும், பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது தானாகவே நடப்பதா இல்லை ஸ்கிரிப்ட்டா என்று இதுவரை புரியாத புதிராகவே காணப்படுகிறது.
அதுபோலவே, கன்னட சீசனில் சந்தோஷ் என்ற போட்டியாளர் கலந்து கொண்டிருந்தார். அவர் ஒரு விவசாயி. அவர் எருது போட்டிகளில் விளையாடுவது, அதிகமாக தங்க நகைகளை அணிவதன் மூலம் கர்நாடகத்தில் மிகவும் பிரபலமாகியிருந்தார்.
இதையடுத்து, கன்னட பிக்பாஸில் சமீபகாலமாக அதன் டிஆர்பி குறைந்துவிட ,அதை மீண்டும் எட்டிப்பிடிக்கும் நோக்கில் சந்தோஷ் அணிந்திருந்த புலிப்பல் டாலர் போட்ட செயினை மட்டும் க்ளோஸப்பில் காட்டியிருக்கின்றனர்.
இதை வெளியில் இருந்து பார்த்த சமூக ஆர்வலர்கள் சந்தோஷ் மீது மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க, நேராக பிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
அதன்படி, இது ஒரு குற்றமாக இருந்தாலும் டிஆர்பிக்காக இப்படியெல்லாம் செய்வார்களா? எனபல்வேறு ரசிகர்கள் புலம்பிவருகின்றனர்.
Listen News!