• Sep 21 2024

“ப்ளீஸ் ..என்னை அப்பிடி கூப்பிடாதீங்க..” பாலா பட நடிகை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர். மேலும் இவர் விஷால், ஆர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் முதன் முதலாக மாடலிங் தான் செய்தார். அதற்குப் பின்னர் இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இதன் பின்னர் தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் 2010 ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் தான் ஜனனி ஐயர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.இதற்கு பின்னர் தான் இவர் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜனனி மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு நடிகை ஜனனி ஐயர், தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற தனது சமூக பெயரை நீக்கி இருந்தார். மேலும் இதுதுகுறித்து பதிவிட்ட அவர், மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன் ஜனனி என்று பதிவிட்டு இருந்தார். இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்றில் மீண்டும் இவர் பெயரை ஜனனி ஐயர் என்று குறிப்பிட அதனை சுட்டிக்காட்டி ‘ஜனனி’ என்று மீண்டும் தனது ஜாதி அடையாளத்தை விரும்பவில்லை என்பதை நிரூபித்து இருந்தார்.

தற்போது ஜனனி ‘ ‘வேழம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள இந்த படத்தை ‘கே 4 க்ரியேஷன்’ சார்பாக கேசவன் தயாரித்து இருக்கிறார். எனினும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 24 ஆம் தேதி ‘வேழம்’ படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அசோக் செல்வன், ஜனனி உள்ளிட்ட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய ஜனனி,”‘வேழம்’ படம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘தெகிடி’ படத்தை தொடர்ந்து நான் இரண்டாவது முறையாக அசோக் செல்வனுடன் இணைந்து வேழம் படம் பண்ணியிருக்கேன். அத்தோடு நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள் எனத் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “உங்களிடம் ஒரு கோரிக்கை, நான் என்னுடைய பெயரை ஜனனின்னு மாற்றிவிட்டேன், இருந்தாலும் என்னைய எல்லாரும் ஜனனி ஐயருன்னு சொல்றிங்க. அப்படி கூப்பிடாதிங்க ஜனனின்னு மட்டும் சொன்னால் போதும் ஐயர் வேண்டாம் ப்ளீஸ் என்றார். இதைக் கேட்ட அங்கத்தினர் கைதட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement