• Nov 14 2024

ப்ளீஸ் அது எல்லாம் யாரும் கண்டு கொள்ளாதீங்க ..உங்க வீட்டுலையும் பெண்கள் இருக்காங்க..! மீனா உருக்கம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 90களில் பிரபல்யமா நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபல்யமானவர். தற்பொழுது நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

இவர் கடந்த 2009 -ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வித்யாசகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த வித்யாசாகர், கடந்த 2022 -ம் ஆண்டு காலமானார். 

கணவரை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா, சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்து வருகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகின்றார்.


இந்த நிலையில், மீனாவின் இரண்டாவது திருமணம் பற்றி சமூக வலைத்தளத்தில் பரவும் வதந்திக்கு எதிராக கண்டனம் தெரிவித்து உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள். அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும். எனவே இரண்டாவது திருமணம் என்று வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என நடிகை மீனா தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement