• Sep 20 2024

சிவகார்த்திகேயனுக்காக பாடல் எழுதியதில் மகிழ்ச்சி’-பிரின்ஸ் படத்தில் இணைந்த ‘தெருக்குரல்’அறிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக டான் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது தனது 20 வது படத்தில் நடித்து வருகின்றார்.

அப்படத்திற்கு பிரின்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்து. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் , பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி வருகின்றார்.

தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நேற்றைய தினம் வெளியாகிய போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் உலக உருண்டையோடு சிஇருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள பாடகர் அறிவு “சிவகார்த்திகேயனுக்காக பாடல் எழுதியதில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement