தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இலங்கையைச் சேர்ந்த கில்மிசா, அசானி என இரண்டு பெண் பிள்ளைகள் கலந்து கொண்டு பாடி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.இந்த நிகழ்ச்சியிலிருந்து 5பேர் வெளியேறியுள்ளனர்.இந்த வாரம் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். மேலும், இந்த வாரம் டெடிகேஷன் சுற்று நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக பாடியுள்ளனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா இலங்கைப் போரின் போது காணமல் போன தனது தாய் மாமனான சாயி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக கண்டா வரச் சொல்லுங்க என்னும் பாடலை எடுத்துப் பாடியிருந்தார். இப்பாடலை கேட்ட நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சினேகன் ஆகியோர் கவலையில் ஆழ்ந்தார்கள்.
மேலும் கில்மிசா தன்னுடைய தாய்மாமா இல்லையே என்ற வருத்தத்தை ஒரு லெட்டரில் எழுதி வாசித்தார். இதனைக் கேட்டதும் சினேகன் உங்களுக்கு சாயியைத் தவிர வேறு தாய்மாமன் இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் தாய் மாமனாக நான் இருக்கின்றேன். உங்கள் பண்டிகை நாட்களில் உங்களுக்கு தரவேண்டிய சீர்களை நான் அனுப்பி வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட கில்மிசா அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!