இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது இசைத்திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர். இவர் பல இசைக்கச்சேரிகளையும் நடாத்தி வருகின்றார்.அந்தவகையில் சமீபத்தில் சென்னை உத்தண்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியானது குளறுபடி ஆகி நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர் .ரகுமானின் " மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தங்களது வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் சாலைகளில் சுமார் 3 மணி நேரங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
மேலும் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலரும் அரங்கத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சீட் ஒதுக்கீடுகள் சரியில்லை என்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பேசும் பொருளான ஏ.ர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்துகொண்டது தொடர்பாக சமூகவலை தளங்களில் பேசப்பட்டு வந்த நிலையிலே நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏசிடீசி நிறுவனத்திற்கு பொறுப்பானவர்களை போலீசார் அழைத்து இனி விசாரணைகள் மேற்றக்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தோடு நீதிமன்ற அனுமதியுடன் ஏசிடீசி நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
Listen News!